Home » » அரசியலில் எப்படி சிந்திப்பது என்று வழிகாட்டிய பெருமை அஷ்ரபுக்கு பிறகு அதாவுல்லாஹ் அவர்களையே சாரும் : சட்டத்தரணி மர்சூம் மெளலானா

அரசியலில் எப்படி சிந்திப்பது என்று வழிகாட்டிய பெருமை அஷ்ரபுக்கு பிறகு அதாவுல்லாஹ் அவர்களையே சாரும் : சட்டத்தரணி மர்சூம் மெளலானா



நூருல் ஹுதா உமர்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் இறுதிக் காலம், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பதவிக்காலம், யுத்த காலம், யுத்தத்தை முடிவுக்கு காெண்டு வந்த காலம், பாேருக்குப் பிந்திய கிழக்கின் அபிவிருத்திக் காலம், வடக்கு கிழக்கு பிரிந்த காலம் என்று அனைத்து காலப்பகுதிகளிலும் அம்பாறை மற்றும் கிழக்கு மாகாண மக்களை மிக நேர்த்தியாக வழி நடாத்தியவர் தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களே என அறிஞர் சித்திலெப்பை ஆய்வு பேரவை தலைவரும் தேசிய காங்கிரஸ் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான சட்டத்தரணி அஷ் ஷெய்யித் மர்சூம் மெளலானா தெரிவித்தார்.

நிந்தவூரில் நேற்று (02) நடைபெற்ற தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர். தனது உரையில் மேலும்,

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு திகாமடுல்லை தேர்தல் மாவட்ட மக்களுக்கு அரசியலில் எப்படி சிந்திப்பது என்று வழிகாட்டிய பெருமை தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களையே சாரும். ஐ.தே.க.வின் தந்திர முகாமுக்குள் புதைந்து கிடந்த முஸ்லிம் சமூகத்தை தேசிய அரசியலில் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் சங்கமிக்கச் செய்த வரலாற்றுத் திருப்புமுனயைை செய்து காட்டிய பெருமை மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களைச் சாரும்.

அவரது அகால மரணத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய  தலைவர் ரஊப் ஹகீம்
தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் நமது திகாமடுல்லை மாவட்ட முஸ்லிம்களை பல முறை ஐ.தே.க.வின் பாெறியில் சிக்க வைத்தது. அதன் பின்னரான காலங்களில் அ.இ.ம.காவும் அதனையே தொடர்ந்தது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாண முஸ்லிம்களை முறையாக வழிநடாத்த பாராளுமன்றத்
தேர்தலில் குதிரைச் சின்னத்தில் போட்டியிட அவர் எடுத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை திகாமடுல்லை மாவட்ட நமது சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஒட்டு மாெத்த சமூகமும் இணைந்து தேசிய காங்கிரஸை பலப்படுத்தும்பாேது திகாமடுல்லை இம்முறை தலை நிமிர்ந்து நிற்கும்.

இப்போது எல்லா ஊர்களிலும் அலை எனத் திரண்டு கிழக்கு வாசலை அலங்கரிக்கும் காட்சி நமது சமூகம் சிந்திக்க ஆரம்பித்து விட்டது என்பதை நிரூபிக்கிறது. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தேசிய காங்கிரஸூக்கு வழங்கும் பேராதரவின் மூலமே, இலங்கை முஸ்லிம்களின் மீது கடந்த நல்லாட்சி பூசிய இஸ்லாமிய அச்ச நோய் என்ற சேற்றினை துடைத்து தேசிய ரீதியில் நமது சமூகத்தை விடுவிக்க வேண்டி இருக்கிறது என தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |