Home » » கொரோ னா வைரஸை வெற்றி கண்ட நாடாக இலங்கை ; சுகாதார அமைச்சர் வெளியிட்ட மகிழ்சித் தகவல்

கொரோ னா வைரஸை வெற்றி கண்ட நாடாக இலங்கை ; சுகாதார அமைச்சர் வெளியிட்ட மகிழ்சித் தகவல்

உலகை அச்சறுத்தும் கொரோனாவைரஸை வெற்றி கண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதாக சு காதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
வைரஸ் பரவல் தாக்கத்தின் பின்னர் நாடு மு ழுமையாக தி றக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ளன. இதுவரை எந்தவொரு கொ ரோ னா நோயாளர்களும் சமூக மட்டத்தில் அ டையாளம் காணப்படவில்லை. இது நாடு என்ற ரீதியில் கிடைத்த பா ரிய வெற்றியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாத க்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1901 ஆகும். இவர்களில் முழுமையாக கு ணமடைந்த 1342 பேர் வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போது வை த்தியசாலைகளில் 536 பேர் தொடர்ந்தும் சி கிச் சை பெற்று வருகின்றனர்.
சமகாலத்தில் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்கள் மத்தியிலேயே கொரோனா நோயாளர்கள் அதிகம் அடையாளம் காணப்படுகின்றனர். விரைவில் மு ழுமையாக கொ ரோ னா அற்ற நாடாக இலங்கை மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொ ரோ னா வைரஸ் ப ரவல் காரணமாக மூ டப்பட்டிருந்த                  கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெ ளியேறும் பகுதி மா த்திரம் இன்று பிற்பகல் 12 மணி முதல் தி றக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |