Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பட்டதாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம்.


நூருல் ஹுதா உமர்

என்னாலான சகல உதவிகளையும் பட்டதாரிகளுக்கு வழங்க நான் என்றும் பூரண ஒத்துழைப்பை பட்டதாரிகளுக்கு வழங்குவேன். கடந்த காலங்களிலும் என்னாலான உதவிகளை என்னை தேடிவந்து உதவி கேட்ட பட்டதாரிகளுக்கு செய்தும் இருக்கின்றேன் அந்த அடிப்படையில் எதிர்காலத்திலும் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களின் மூலமாகவும் பல்வேறு விடயங்களில் உதவ தயாராக இருக்கிறேன். தொழில் தேடும் பட்டதாரிகள், தொழில் பெற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எங்களின் கட்சியினுடாக நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பேன் என தேசிய காங்கிரஸின் திகாமடுல்ல வேட்பாளர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.

பட்டதாரிகளின் சார்பில் சாய்ந்தமருது தொழில் வழிகாட்டல் நிலைய முக்கியஸ்தர்கள் நேற்று மாலைஅவரை சந்தித்து பட்டதாரிகளின் பிரச்சினைகளை முன் வைத்த போது இந்த விடயங்களை தெரிவித்தார்.

மேலும் எமது நாட்டில் உள்ள பட்டதாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை முக்கிய அமைச்சிக்களின்  மேலதிக செயலாளராக இருந்தவன் என்ற வகையிலும் முன்னாள் பிரதேச செயலாளராக இருந்த அனுபவத்திலும் நான் நன்றாக அறிவேன். தூர இடங்களில் நியமனம் கிடைக்கப்பெற்ற விடயங்கள் தொடர்பாகவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பில் நான் அரசாங்க அதிபர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப சில விடயங்களை தீர்வு காண முடிந்தது எதிர்காலத்திலும் எமக்கு ஒரு அரசியல் பலம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இந்த பிரச்சினைகளை தீர்வு கண்டு கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments