Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இம்ரான் மஹ்ரூபிற்கு போட்டியாக அவரது தங்கையை நியமித்த ஐ.தே.க !


 
(நூருல் ஹுதா உமர்)

ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவராகவும் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளராகவும் மறைந்த அமைச்சர் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் புதல்வியான ரோகினா மஹ்ரூப் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமன கடிதத்தை, சிறிகொத்தாவில் வைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திடமிருந்து, கடந்த சிலதினங்களுக்கு முன்னர் (02) அவர் பெற்றுக்கொண்டார்.


ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன கருத்துவேறுபாடு காரணமாக வெவ்வேறாக இயங்கும் இத்தருணத்தில் ரோகினா மஹ்ரூப்பின் சகோதரர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் தொலைபேசி சின்ன வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரை வீழ்த்தவே இந்த திட்டம் திருகோணமலையில் அரங்கேறியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.   

Post a Comment

0 Comments