Advertisement

Responsive Advertisement

பெரிய போரதீவில் இடம்பெற்ற இரத்த தான முகாம்

உதிரம் கொடுப்போம் உயிரைக்காப்போம்" தொனிப்பொருளில் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பட்டாபுர இளைஞர்களின் ஏற்பாட்டில் 14.06.2020 பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

குருதிக்கொடையாளர்களின் தினத்தினை முன்னிட்டு பெரிய போரதீவு பட்டாபுரம் இளைஞர் ஒன்றியத்தினால் இந்த இரத்த தான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் க.விவேகானந்தநாதன் தலைமையிலான வைத்திய சாலை குழுவினர் இரத்தம் பெற்றுக்கொண்டனர்.இந்த இரத்ததான முகாமில் பல இரத்த கொடையாளிகள் பங்குபற்றி இருந்தனர். அத்துடன் இந்த இளைஞர் அமைப்பு மாவட்டம் சார்ந்து பல சமூக சேவைகளை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments