அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் கிராமத்தில் சுமார் 70வது வயது மதிக்கதக்க முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தள்ளனர்.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சடலம் குடியிருப்பு பகுதியில் இருந்து சற்று தொலைவில் காணப்பட்டதாகவும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் எஸ்.பார்த்தீபன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் குறித்த நபர் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்தவர் இல்லையென்று தெரிவித்து உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சடலம் சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த இடத்தில் வைக்கப்பட்டிருப்பதுடன் இவரை அடையாளம் காண முடியாது இருப்பதாகவும் உறவினர்கள் அல்லது அறிந்தவர்கள் சடலத்தை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவர் அணிந்திருந்த சாரம் சடலம் இருக்கும் இடத்தில் இருந்து சற்று தூரத்தில் இருப்பதுடன் இவருடைய கை கால் பகுதிகளில் காயங்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராம உத்தியோகத்தருடன் இணைந்து திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தனர்.
0 Comments