Home » » வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஸ்ரீலங்காவின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக பொத்துவில் வரையும், மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தொட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீட்டர் வரையில் வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த கடற் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் நாட்டின் ஏனைய கடற் பரப்புகள் இடைக்கிடை கொந்தளிப்பாக காணப்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்தின் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பிரதேசங்களில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இதேவேளை இன்று காலை ஏற்பட்ட மினி சூறாவளியின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கடற்படையினர் மற்றும் மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |