முன்னணி சோசஷிஸ கட்சியின் 10 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்காவில் பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் ஃப்லொட்டிற்கு நீதி கோரி அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தை தடுத்து 10 பேர் கைது செய்யப்பட்டமையினால் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டுள்ளது.
இந்த குழப்ப நிலை காரணமாக கொள்ளுப்பிட்டி பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.




0 Comments