Advertisement

Responsive Advertisement

தொலைபேசிகளின் தட்டுப்பாடு காரணமாக அதிகரிக்கும் விலை!!

இலங்கையின் பொருட்சந்தையில் தற்போது கைப்பேசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பேசிகளை இறக்குமதி செய்கின்ற முன்னணி நிறுவனங்களின் கருத்துப்படி, கொரோனா நோய் பரவல் காரணமாக இந்தநிலைமை ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

இதன்காரணமாக சில வணிகர்கள், கைப்பேசிகளை உரிய விலையை விட அதிகரித்த விலையில் விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இலங்கையின் முன்னணி கைப்பேசி இறக்குமதி நிறுவனமான சிங்கர் சிறிலங்கா நிறுவனத்தின் நடவடிக்கை பணிப்பாளர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளதாவது , ஸ்மார்ட் ஃபோன் எனப்படும் திறன்பேசிகளைப் போன்று கணினிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்டார்.

எனினும் எதிர்வரும் காலத்தில் இந்த தட்டுப்பாடு நீக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments