Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தனிமைப்படுத்தல் நிலையத்தில் தற்கொலை செய்துக்கொண்ட நபர்


ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 50 வயதான நபர், கண்டியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இன்று தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கல்கிஸ்சை படோவிட்ட மூன்றாம் கட்டம் பகுதியை சேர்ந்த 50 வயதான சுமித் அம்போன்சு என்ற இந்த நபர், தான் அணிந்திருந்த சாரத்தை பயன்படுத்தி, கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த இந்த நபர் கண்டியில் உள்ள பழைய போகம்பர சிறையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த நபர், இன்று அதிகாலை 4.30 அளவில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
ஹெரோயினை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காத நிலைமையில், மனநலம் பாதித்து இந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments