Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1880 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் புதிதாக 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
<அந்தவகையில் அடையாளம் காணப்பட்ட புதிய நோயாளிகளில் 02 பேர் கடற்படை என்றும் ஒருவர் குவைத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 673 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும்நிலையில், 57 பேர் தொடர்ந்தும் வைத்தியகண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments