Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்

இலங்கையில், இறுதியாக ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,947 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 22 தொற்றாளர்களில், டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த 18 பேரும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த 02 பேரும், இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த ஒருவரும், ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த ஒருவருமே என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,421 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 515 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 61 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments