Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உறவினர்களுக்கு இடையிலான தகராறில் 12 வயது சிறுமிக்கு கத்திக் குத்து!!

உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது 12) எனும் சிறுமியே படுகாயமடைந்துள்ளார்.

அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு அது கைக்கலப்பாக மாறியது.

அதன் போது ஒருவர், பிறிதொருவரை கத்தியால் குத்த முனைந்த போது, அங்கிருந்த சிறுமியின் கழுத்து பகுதியில் கத்தி குத்தியுள்ளது.

Post a Comment

0 Comments