ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் ப்லோய்ட் அமெரிக்காவில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்கள் 12 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜோர்ஜ் ப்லோய்ட் கொலை சம்பவத்திற்கு நீதி கோரி, அமெரிக்காவில் வன்முறை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் மாத்திரம் அன்றி ஐரோப்பிய நாடுகள் அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவின் வொஷிங்டனில் நேற்றைய நாளில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடாத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ப்லோய்ட் என்பவர் வெள்ளை இன பொலிஸ் அதிகாரிகளினால் கடந்த மாதம் 25ஆம் திகதி கொலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments