Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்றாளர்களுக்கு ஆபத்தாக மாறும் இரத்த உறைவுகள்


கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 30 வீதமானோருக்கு ஆபத்தான இரத்த உறைவுகள் ஏற்பட்டு வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
த்ரோம்போசிஸ் என்றும் அழைக்கப்படும் இரத்த கட்டிகளே இறப்பு எண்ணிக்கையில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
நுரையீரலில் கடுமையான வீக்கம் அடைவதுடன் வைரஸுக்கு எதிராக உடலின் இயற்கையான பதில் என்பனவும் இந்த இரத்த உறைவுகளுக்கு காரணமாக இருக்கின்றன.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்கள் பொதுவாக எதிர்பார்ப்பதை விட மிக அதிகமான இரத்தக்கட்டிகளைக் காண்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நோயாளிகளின் நுரையீரலில் நூற்றுக்கணக்கான நுண்ணிய-கட்டிகளை கூட மருத்துவர்கள் கண்டுபிடித்ததாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments