Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் குழாய் நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு அரசாங்க அதிபர் வேண்டுகோள்



மட்டக்களப்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடி நீரினைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வேறு தேவைகளுக்குமாக குடிநீரைப் பயன்படுத்துவதினைத் தவிர்த்து சிக்கனமாக குடி நீரினைப் பயன்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நீர் வளத்தினை முகாமைத்துவம் செய்து உன்னிச்சைக் குளத்திலிருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்குமாக நீரினை பங்கீடு செய்தல் தொடர்பான விசேட கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையினூடான குடிநீருக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினூடாக விவசாயத்திற்குமான நீர் உன்னிச்சைக் குளத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2004 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டஉடன்படிக்கைக்கமைவாக உன்னிச்சைக் குளம் புணருத்தான வேலைகள் நிறைவுபெற்றதையடுத்து மட்டக்களப்பு பிரதேசத்திற்கு நீர் வழங்குவதற்காக 15ஆயிரத்தி 400ஏக்கர் அடி நீர் குடிநீருக்காக வழங்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கமைவாக இந்த ஆண்டு முழுவதுமாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையூடாக குடிநீர் தேவைக்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ள 9 ஆயிரம் ஏக்கர் அடி நீரில்இதுவரை 2ஆயிரத்தி 500 ஏக்கர் அடி நீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமாக உள்ள காலத்திற்கு 6ஆயிரத்தி 500ஏக்கர் அடி நீர் போதுமானதாகும் என நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை பிராந்திய முகாமையாளர் டீ.ஏ. பிரகாஸ் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments