Home » » ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் அதிகமாக ஒன்று சேர்ந்த மக்கள்!!

ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் அதிகமாக ஒன்று சேர்ந்த மக்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை தொடக்கம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிக்கும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக இன்று வர்த்தக நிலையங்களில் சனக்கூட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. அத்துடன் சுகாதார நடைமுறைகளை பேணிய வகையில் மக்கள் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றியதை காணமுடிந்தது.

பொலிஸாரும் படையினரும் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் முககவசம் அணியாதவர்களுக்கு அதனை அணியவைக்கும் நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர்.

இதேநேரம் இன்று நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில் அங்கு பெருமளவு மக்கள் கூடியதனால் சமூக இடைவெளியை பேணுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக நீதிமன்ற நடவடிக்கைக்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கூடியிருந்தனர். இந்த நிலையில் வெளியில் அனைவரும் நிறுத்தப்பட்டு வழக்குகளுக்காக அழைக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |