கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் நாடளாவி ரீதியில் உள்ள வைத்தியசாலைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுசேவைகள் ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் பொதுசேவைகள் ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கான நவீன கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பொதுசேவைகள் ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய புத்தட்டுவே ஆனந்த தேரரிடம் பொதுசேவைகள் ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நாகலிங்கம் சசிகரன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கட்டில்கள் இன்று காலை ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நாகலிங்கம் சசிகரன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.கலாரஞ்சினியிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பூ.புஸ்பராஜா, பிரதான தாதிய பரிபாலகர் வி.ஜெகதீசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்களான டாக்டர் எப்.பி.மதன்,டாக்டர் மைதிலி சிவானந்தன், பிரதான கணக்காளர் டி.எஸ்.டேவிட், வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ரி.குகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சுமார் 30இலட்சம் ரூபா பெறுமதியான கட்டில்கள் இதன்போது வைத்தியசாலை பணிப்பாளிடம் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments: