Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறையைத் திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தெற்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாண கல்வி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாண அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த செயலாளர் அதன் பின்னர் பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணை தயாரிக்கப்படும் என்றார்.
முதல் கட்டத்தில் தரம் 10 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். இதனைத் தொடர்ந்து தரம் 13; வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments