தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஸ்ரீலங்காவிலும் அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது.
இந்நிலையில், அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பும் கலந்துகொண்டிருந்தது.
இதற்கிடையில் அன்று மாலை பிரதமர் மகிந்தவுடன் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் மீண்டும் தனிமையில் சந்தித்துப் பேசியிருந்தனர்.
இதன்போது பேசப்பட்டது என்ன? கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு என்ன? வடக்கு கிழக்கில் கொரோனா தொற்றின் நிலவரம் என்ன? இராணுவத்தின் பிரசன்னம் எந்தளவிற்கு தமிழர் பகுதிகளில் இருக்கின்றன.
இதுபோன்ற பல தகவல்களை ஐபிசி இணையத்தளத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,
0 comments: