கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பபட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிராந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வீட்டின் கூரைகள் காற்றில் முழுமையாக அள்ளுண்டு சென்றுள்ளதுடன் முன்பகுதி சுவரும் இடிந்து விழுந்துள்ளது.
எனினும் வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. குறித்த வீட்டில் வசித்தவர்கள் அயலவர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான வசதிகளை தோட்ட நிர்வாகத்தினரும், கிராம சேவகரும் செய்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: