Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சுவர் இடிந்து வீழ்ந்ததில் 4 வயது சிறுவன் பலி! மேலுமொரு சிறுவன் படுகாயம்!!


வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துடன், அவரது சகோதரர் காயமடைந்த சம்பவம் இன்று (10) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா 03, மாஞ்சோலைச் சேனை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.பழைய வீடொன்றின் சுவருக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ரணீஸ் முஹம்மது ஷான் எனும் சிறுவன் மீது அவ்வீட்டின் சுவர் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளதாக குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இவரின் சகோதரான 2 வயதான ரணீஸ் முஹம்மது தாஜ் என்பவர் படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments