Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பல்கலை விண்ணப்பங்கள் உறுதிப்படுத்தல் மே 20, 21, 22

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு வசதி வழங்குமாறு ஆலோசனை

பல்கலைக்கழகங்களில் இணைவதற்கான விண்ணப்பப்படிவங்களை மே 20, 21, 22 ஆகிய தினங்களில் உறுதிப்படுத்த முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை, அதிபர் ஊடாக உறுதிப்படுத்துவதற்கு எதிர்வரும் புதன்கிழமை (20) முதல் 3 நாட்களுக்கு மேற்கொள்வதற்கான வசதிகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் இரு தடவைகள் இக்கால எல்லை நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான புதிய தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது காணப்படும் நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, குறித்த பாடசாலையின் அதிபர் அல்லது உதவி அதிபரினால், தமது பாடசாலையில் உயர் தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments