Advertisement

Responsive Advertisement

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது சிறுவன் கைது - மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள மருமகள் முறையிலான சிறுமியை அதே பிரதேசத்தைச் சோந்த 14 சிறுவன் காதலித்து வந்துள்ளதாகவும், சம்பவதினமான சனிக்கிழமை பகல் 12 மணியளவில் கிரான்வேம்பு பகுதியிலுள்ள சிறுவனின் சகோரனின்  வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று அங்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, குறித்த சிறுமி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து காவல் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  முறைப்பாடு செய்துள்ள நிலையில், குறித்த சிறுவனை பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments