Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா பீதியின் மத்தியில் பிரான்ஸில் கத்தி குத்து தாக்குதல்! இருவர் பலி

பிரான்ஸில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளனர்.
பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இந்த நிலையில் அங்கு நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டிரோம் நகரில் வீதியால் நடந்து சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அந்நாட்டு பொலிஸார் தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்து அவரிடம் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments