Home » » கொழும்பில் இருந்து வீடு திரும்பிய இளைஞன் திடீரென உயிரிழப்பு : யாழ்ப்பாண மக்களுக்கான முக்கிய கோரிக்கை! முக்கிய செய்திகள்

கொழும்பில் இருந்து வீடு திரும்பிய இளைஞன் திடீரென உயிரிழப்பு : யாழ்ப்பாண மக்களுக்கான முக்கிய கோரிக்கை! முக்கிய செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் யாழ்ப்பாண மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டமானது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் மக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
மக்கள் எதிர்வரும் நாட்களிலும் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே சென்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே பொதுமக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி வீட்டுக்கு சென்ற 30 வயதான இளைஞர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார்.
எம்லிப்பிட்டிய மித்தெனிய காரியமடித்த, தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காரியமடித்த குடாகொட, உடகஹாவத்தை பிரதேசத்தை சேர்ந்த விக்ரமராச்சி கங்கானம்கே வஜிர பிரசங்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |