இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை தற்போது 198 ஆக அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில், இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 54 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இம்மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னரே நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தியுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 Comments