கொரோனா வைரஸ் குறித்த மருந்துகளை கிசிச்சைகளை உருவாக்குவதற்கு அவசியமான மரபணு அமைப்பினை கண்டுபிடித்த சீனா விஞ்ஞானி ஒருவர் மௌனமாக்கப்பட்டுள்ளார் என டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான பிரபல நிபுணரும், சீனாவின் வெளவால் பெண் எனப்படும் சி ஜெங்கிலியே சீன அரசாங்கத்தினால் மௌனமாக்கப்பட்டுள்ளார் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
சி ஜெங்கிலி ஆபத்தான குகைகளில் வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதால் வெளவால் பெண் என அழைக்கப்பட்டவர்.
வருட இறுதியில் வுகானில் உருவாகிய சுவாசப்பிரச்சினை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்ட பின்னர் சி ஜெங்கிலி வுகானில் உள்ள அதி உயர்பாதுகாப்புடன் கூடிய ஆய்வகத்திற்கு அழைக்கப்பட்டார்.
அங்கு அழைக்கப்பட்ட மூன்று நாட்களில் அவர் மிக முக்கியமான மரபணு அமைப்பினை கண்டுபிடித்துள்ளார்.
அவரது குழுவினர் சீனாவின் தென்பகுதியில் உள்ள யுனானில் வாழும் குதிரைகால் வெளவால்களே இந்த வைரசிற்கு காரணம் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களது கண்டுபிடிப்புகள் இந்த நோய் சார்சினை போன்றது என்பதை உறுதி செய்துள்ளன.
வுகானின் 76 வார முடக்கலின் பின்னர் வெளியே வந்த பத்திரிகையாளரான கா யு ஜனவரி 2 ம் திகதியவில் பெண் விஞ்ஞானியின் குழுவினர் மரபணு அமைப்பை உருவாக்கிவிட்டனர் என்பதையும் அதன் பின்னர் அவர்கள் மௌனமாக்கப்பட்டனர் என்பதையும் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் வுகானின் வைரஸ் தொடர்பான ஆய்வகத்தின் இயக்குநர் நோய் தொடர்பான முக்கிய தகவல்களை எவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என மின்னஞ்சலை தனது பணியாளர்களிற்கு அனுப்பிவைத்துள்ளார் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை வெளியாகி எட்டு நாட்களின் பின்னர் சாங்காயை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தலைமையிலான குழுவினர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை பயன்படுத்தி மரபணு அமைப்பை வெளியிட்டுள்ளனர்.
இரண்டு நாட்களின் பின்னர் அவரது ஆய்வுகூடம் மூடப்பட்டுள்ளது.
இணையத்தின் மூலம் வழங்கிய விரிவுரையொன்றில் சி ஜெங்கிலி ஜனவரி 14 ம் திகதி புதிய வைரஸ் மனிதர்களை தாக்கலாம் என்பதை தனது குழுவினர் கண்டுபிடித்;துள்ளனர்.
0 comments: