Home » » யாழில் ஊரடங்கு தளர்த்தப்படுமா? பாதுகாப்பு செயலர் வெளியிட்டுள்ள தகவல்

யாழில் ஊரடங்கு தளர்த்தப்படுமா? பாதுகாப்பு செயலர் வெளியிட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ண மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி எயார்மார்சல் சுமங்கல டயஸ் ஆகியோர் வடக்கில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று யாழிற்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு தான் இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள். மற்றையது உண்மையை பேசுங்கள். ஏனெனில் நாங்கள் உங்களுக்காகவே சேவையாற்றத் தயாராக இருக்கின்றோம்.
உண்மையை மறைத்து மேலும் ஆபத்தை ஏற்படுத்தாது உண்மைகளை வெளிப்படையாக கூறினால் மட்டுமே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கிலுள்ள அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக தற்போது யாழ்ப்பாணமும் காணப்படுகின்றது.
எனவே, தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, நீங்கள் உண்மையைக் கூறாது விட்டால் நாம் எந்தவித செயற்பாட்டிலும் ஈடுபட முடியாது. எனவே வடக்கில் உள்ள மக்களிடம் தான் இந்த கோரிக்கைகளை முன்வைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |