Home » » யாழில் கோரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது? உறுதியான தகவலை வெளியிட்ட வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழில் கோரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது? உறுதியான தகவலை வெளியிட்ட வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எனவே மக்கள் குழப்பமடைய வேண்டாம் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தி யமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக செயற்படுகின்றனர். எனவே மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சமடையாமல், சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும், அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுமாறும் அவர் கேட்டிருக்கின்றார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
யாழ்.மாவட்டத்தில் 20 பேருக்கு நேற்று பரிசோதிக்கப்பட்டது. இதன் போது எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் இன்றைய தினம் 30ற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை பரிசோதனை நடாத்தப்பட்டது. அதில் 17 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
நோயாளர்கள் அனைவரும் விசேட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவார்கள். யாழ்.அரியாலைக்கு வந்த மதபோதகர் ஊடாகவே யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியிருக்கின்றது.
வேறு வழிகள் ஊடாக மாவட்டத்திற்குள் தொற்று பரவவில்லை. உலகளாவிய ரீதியில் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், இதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என தொியவில்லை. ஆனால் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார பிரிவினரும் தொடர்ச்சியாக நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே மக்கள் அச்சப்படதேவையில்லை. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அறிவுறுத்தல்களுக்கு கீழ்படிந்து நடவுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |