தமிழகத்தில் மது கேட்டு சென்ற சிறுவர்களுக்கு அறிவுரை கூறிய நபரை அவர்கள் வெட்டிக்கொன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் கடந்த 6 -ம் திகதி கூலித் தொழில் செய்து வந்த வீரா என்பவர் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட நிலையில் அங்கிருந்த பிளாக் மாரியம்மன் கோவிலில் சடலமாக மீட்கப்பட்டார் . இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கௌதம் சஞ்சய் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
|
இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரிக்கையில் ஊரடங்கு தினமான கடந்த 5-ம் திகதி தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதிகளில் எங்கே மது கிடைக்கும் என அவர்கள் தேடிக் கொண்டிருந்த சூழ்நிலையில் வீராவிடம் அது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது வீரா அவர்களுக்கு அறிவுரை கூறிய நிலையில் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களோடு வீராவை தாக்கியுள்ளனர்.
இதில் ரத்த காயங்களுடன் வீரா, சிறிது தூரம் நடந்து சென்று கோவிலில் சரிந்து விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது தென்னம்பாளையம் சந்தையில் உள்ள சிசிடிவி கேமராவில் கூலி தொழிலாளி வீராவை சிறுவர்கள் கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் துரத்தி தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
|
Home »
இந்தியச் செய்திகள்
» கொரோனா ஊரடங்கு: அறிவுரை கூறிய நபரை வெட்டிக்கொன்ற சிறுவர்கள்!
கொரோனா ஊரடங்கு: அறிவுரை கூறிய நபரை வெட்டிக்கொன்ற சிறுவர்கள்!
Labels:
இந்தியச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: