Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இரு மணித்தியாலங்களில் ஒரு நகரம் முழுவதிலும் கிருமி தொற்று நீக்கும் வகையிலான கருவி கண்டுபிடிப்பு

இரண்டு மணித்தியாலங்களில் ஒரு நகரம் முழுவதிலும் கிருமி தொற்று நீக்கக்கூடிய வகையிலான புதிய கருவியொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வாகனப் பராமரிப்பு சேவை நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவரினால் இந்த புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.யூ.எஸ்.ஏ.சந்திரசிறி என்பவரினால் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பெரும் நெருக்கடி நிலையை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.
இந்த நிலையில் இலங்கையில் இந்த நோய்த் தொற்றை எதிர்க்கும் வகையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கலேவல பகுதியில் மக்கள் செறிவாக வந்து செல்லும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கும் கூடாரங்களை அமைக்கவும் குறித்த கண்டுபிடிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments