நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். ஆகவே தகவல்களை மறைப்பது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமையும் என்பதோடு உரிய சிகிச்சை வழங்கலுக்கும் பாதிப்பாக அமையும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இருமல், சளி, தொண்டை புண் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 1999 அல்லது 1390 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
0 comments: