Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் வீட்டுப் பிராணிகளுக்கும் கொரோனா பரிசோதனை


வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாக அரசாங்க மிருக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் ஹேமமாலி கொதலாவல தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், செல்லப் பிராணிகளுக்கும் இப்பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

கொரோனா நோய்த் தொற்று பரவிய பகுதிகளில் வளர்க்கப்படும் வீட்டுப் பிராணிகளுக்கு நோய்த் தொற்று பரவியுள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.


கொரோனா நோய்த் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவியதாக இதுவரையில் எந்தவொரு நாட்டிலும் தகவல்கள் வெளியாகவில்லை.

சுகாதாரத் திணைக்களத்தின் மிருக சுகாதாரப் பிரிவினால் இலங்கையில் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments