Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு! ஸ்ரீலங்காவில் மேலும் உயர்ந்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அ மைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக இன்று காலை 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனையின் முடிவுகளில் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் மட்டும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தின் பின்னர் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது.
எனினும், பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார விழிப்புணர்வோடு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments