Home » » கொரோனாவால் உயிரிழப்போரின் இறுதிச்சடங்கில் ஒன்றுகூடுவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொரோனாவால் உயிரிழப்போரின் இறுதிச்சடங்கில் ஒன்றுகூடுவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொரோனா தொற்றினால் உயிரிழந்த நபரின் இறுதி சடங்கிற்காக பொதுமக்கள் ஒன்றுகூடுவார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொரோனா பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் யாராவது உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்துச் செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூடுவதாக தெரியவந்துள்ளது.
இதற்கு பின்னர் மக்கள் ஒன்று கூடுவார்களாயின் அவர்களுக்கு எதிராக தொற்று நோய் தடுப்பு சட்டத்தைப் போன்றே இலங்கையில் உள்ள சட்ட விதிகளுக்கு அமைவாக கடுமையாக தண்டணை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமான நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை செய்யும் விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அவசர நோய் நிலமை ஏற்பட்டால் எத்தகைய வாகனங்களிலும் செல்ல முடியும். இதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸாரினால் வழங்கப்படும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதுடன் இது தொடர்பாக புலனாய்வு பிரிவை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்படும்.
இதே போன்று அவசரகால அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |