Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வவுனியாவில் முழுமையாக முடக்கப்பட்டுள்ள பகுதி! ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது வெளியாகிய அறிவிப்பு

வவுனியாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார அமைச்சிடம் பரிந்துரை முன்வைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது.
இதனை அடுத்து வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வவுனியாவை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது இருப்பிடம் அமைந்துள்ள மகாகச்சகொடி பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வவுனியாவில் நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிப்பது தொடர்பாக நாம் கலந்துரையாடியிருக்கிறோம்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சிடம் நாம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். அங்கிருந்து எமக்கு முடிவுகள் கிடைக்க பெறும் பட்சத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments