Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திடீரென மயங்கி விழுந்தவர் வைத்தியசாலையில் அனுமதி


வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் நேற்று மாலை திடீர் என மயங்கி வீழ்ந்த நபர் ஒருவர் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த நபர் இரண்டாம் குறுக்கு தெருவில் நின்றிருந்த சமயம் திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அங்கிருந்தவர்களால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினர் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் அந்நபரை அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.

Post a Comment

0 Comments