Home » » யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பிய சம்மாந்துறை வாசிக்கு கொரோனா தொற்று இல்லை

யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பிய சம்மாந்துறை வாசிக்கு கொரோனா தொற்று இல்லை

யாழ்ப்பாணத்தில் இருந்து 30 நாட்களுக்கு முன்னர் திரும்பிய சம்மாந்துறையில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் சுகுணன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, சம்மாந்துறை பகுதி பிரதேசவாசி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்தாக அடையாளப்படுத்தப்பட்டமை தொடர்பாக வெளிவந்த வதந்தி தொடர்பாக நேற்றைய தினம் மாலை கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து முப்பது நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியிருந்தார். குறித்த நபருக்கு தொண்டைவலி சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி இருந்தோம். அதன் பின்னர் அங்கிருந்து அவரில் இருந்து சில கூறுகளை பெற்று கண்டி போதனா வைத்தியசாலைக்கு ஆய்வு செய்ய அனுப்பினோம்.

இதனை தொடர்ந்து அவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி
இருந்தோம்.
எனினும் குறித்த நபருக்கு எவ்விதமான கொவிட் தொற்றும் இல்லை என நெகடிவ் என ஆய்வறிக்கைகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.
எனவே சம்மாந்துறை பகுதி மக்கள் இது குறித்து அச்சமடைய வேண்டாம். அத்துடன் சமூக ஊடகங்களை பாரிய பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை எமக்கு வழங்க வேண்டும்.
தற்போது மிக வேகமாக உறுதிப்படுத்தப்படாத செய்தகிள் மக்களைச் சென்றடைவதை தடுப்பதற்கு உதவ வேண்டும். ஒரு நபர் தொடர்பாக தற்போது வெளிவந்துள்ள சரியான செய்தியை குறித்த இணையத்தளம் அல்லது சமூக ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |