Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்து ஆலயங்கள் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு சில வேண்டுகோள்களை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்காக இன்று காலை 8.45 அளவில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து 8.47 அளவில் வீடுகளில் விளக்குகள் ஏற்றப்பட்டு பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இன்று காலை 8.40 அளவில் சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மணி ஓசை எழுப்பப்பட்டது. இந்நிலையில், இந்து ஆலயங்களில் மாலை 5 மணியளவில் ஆலய மணிகளை ஒலிக்கச் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில், புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
இந்த விசேட வழிபாட்டின்போது கொரோனா வைரஸ் பரவலை ஒழிப்பதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களையும் உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
பொது மக்கள் சமூக இடைவெளியை தொடர்ந்தும் பேணுவது அவசியமாகின்றது. நாட்டில் இன்னமும் கொரோனா தொற்று அபாயம் இன்னமும் நீங்கவில்லை என்றும், ஒவ்வொருவரும் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவரும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அதனுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிகழாதிருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகரும் இனங்காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments