மட்டக்களப்பு நகரப் பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த கடை பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே கடையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் அமைந்துள்ள முபாரக் புடவைக் கடையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த நகரவாசி மக்கள் உடனடியாக மட்டக்களப்பு தீயணைப்பு பிரிவினருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கடையில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் அருகில் உள்ள கடைகளுக்கும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பூட்டப்பட்டிருந்த கடையில் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை எனவும் கடையில் ஏற்பட்ட சேத விபரங்களும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments