Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தாழங்குடா கல்வியல் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கர வண்டியும் காரும் மோதி விபத்து!


( அஸ்ஹர் இப்றாஹிம் , எம்.எம்.ஜெஸ்மின்)

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்  தாழங்குடா கல்வியல் கல்லூரிக்கு முன்பாக  முச்சக்கர வண்டியும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் உட்பட மூன்று பேர் பலத்த காயத்திற்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

.இவ்விபத்து இன்று மாலை ஊரடங்கு சட்டம்  அமுலில் இல்லாத வேளையில்  இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், கல்முனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த காரும் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 முச்சக்கர வண்டியும், காரும் பலத்த சேதத்திற்குள்ளானதுடன் , 
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்



Post a Comment

0 Comments