(நூருள் ஹுதா உமர்/ எல்.எம்.சர்ஜுன்)
அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றும் பட்டதாரி பயிலுனர்கள் அனைவரும் இணைந்து தங்களின் ஏப்ரல் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அசாதாரண சூழ்நிலையில் தொழில் ரீதியாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவும் நோக்கில் உலர் உணவுப்பொதிகள் வழங்கியுள்ளார்கள்.
இவ் உலர் உணவு பொதிகள் கல்முனை பிரதேச செயலக பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இவ் பட்டதாரி பயிலுனர்கள் ஒற்றுமையுடனா5ன சமூகம் சார்ந்த செயற்பாடு3களை தொடர்ந்தும் இவ்வாறு முன்னெடுத்து செல்லுவதற்கு பிரதேச மக்கள் தமது பாராட்டுக்களை தெரிக்கின்றனர்.
0 comments: