Home » » ஸ்ரீலங்காவில், கொரோனாவை பரப்பிய நபரே கொரோனாவால் உயிரிழப்பு!

ஸ்ரீலங்காவில், கொரோனாவை பரப்பிய நபரே கொரோனாவால் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்ரீலங்காவில் உயிரிழந்த 7ஆவது நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர் கொழும்பு - மவுண்ட்லவனியாவைச் சேர்ந்த உம்ரித் ஹாஜியார். வயது 48 ஆகும். களுத்துறையைச் சேர்ந்த இவர் தற்போது கொழும்பில் வசித்து வருகின்றார். இவர் பிரபலமான இரத்தினக்கல் வியாபாரி ஆவார்.
கொரோனா அச்சம் ஏற்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குறித்த தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த தம்பதிகளில் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவர் அண்மையில் ஜேர்மனிக்குச் சென்று வந்துள்ளார். இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
எனினும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. தனியார் வைத்தியசாலையில் பரிசோதனை செய்திருந்தார்.
இந்த தகவல் தெரிந்ததும் சுகாதார அதிகாரிகளும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், இவரை அடையாளம் காண பெரும் பிரயத்தனம் செய்தனர்.
பெரும் முயற்சியின் பின்னரே தம்பதியினர் அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து கொரோனா தொற்றுடன் பொறுப்பற்று திரிந்த இவர்கள் மீது கொரோனாவை பரப்பினர் என பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்தனர்.
மார்ச் 2ஆம் திகதியளவில் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |