கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 180ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பொது மக்களை விழிப்பாக இருக்குமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது அரசாங்கம் வழங்கும் அனைத்து அறிவுரைகளையும் கேட்டு பின்பற்றுமாறும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று காலை ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தற்போது வரை ஆறுபேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments