Home » » கொரோனாவின் அதியுச்ச தாக்கத்தால் சொல்லொணா துயரத்தில் அதிர்ந்து போயிருக்கும் அமெரிக்கா

கொரோனாவின் அதியுச்ச தாக்கத்தால் சொல்லொணா துயரத்தில் அதிர்ந்து போயிருக்கும் அமெரிக்கா



அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலி எண்ணிக்கையிலும் அந்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரத்து 348 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 30 ஆயிரத்து 206 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.
அண்மை நாட்களாக அமெரிக்காவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றதால் இறந்த உடலங்களை எரிக்கவோ அப்புறப்படுத்தவோ முடியாமல் வீதியோரங்களில் ஆங்காங்கே உடலங்கள் காணப்படுவதாகவும் அழுகிய நிலையிலும் புழுக்கள் மொய்த்தவாறும் துர்நாற்றம் வீசுவதாகவும் ஒரு காணொளி வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |