Advertisement

Responsive Advertisement

நாட்டின் நிலமையைப் பொறுத்தே மே 11 இல் பாடசாலைகள் ஆரம்பமாகும் - கல்வி அமைச்சர்

நாட்டின் நிலமையைப் பொறுத்தே மே 11 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு எதிர்வரும் மே 11 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பமாகும் என அறிவித்துள்ள போதிலும் மே 11 இல் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பது நாட்டின் நிலமையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகப் பெரும தெரிவித்துள்ளார்.
நிவ்ஸ்நவ்.எல்கே இணையத்தளம் கல்வி அமைச்சருடன் மேற்கொண்ட உரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் நகர்புறப் பாடசாலைகளில் தொலைதூரக் கற்பித்தல் சாத்தியமாகியுள்ளதாகத் தெரிவித்த அவர் கிராமப் புற மாணவர்களுக்கும் இது சென்றடையும் வகையில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இலங்கை வானொலி மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தானத்தின் ஊடான கல்வி ஒளிபரப்பு இடம் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிவ்ஸ் நவ் இணையத்தளம் கல்வி அமைச்சருடன் மேற்கொண்ட உரையாடலின் ஒலி வடிவத்தை கீழே காணப்படும் வீடியோவில் காணலாம்.

Post a Comment

0 Comments