Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வவுனியாவில் இன்று காலை உயிரிழந்த பெண் தொடர்பில் வெளியாகிய தகவல்!

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனோ இல்லை என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா கற்குழியை சேர்ந்த பெண்னொருவர் உயிரிழந்த நிலையில் அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் நேற்றையதினம் (1) காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (2) காலை குறித்த பெண் மரணமடைந்திருந்தார்.
இதேவேளை குறித்த பெண் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே வைத்த்தியசாலை பணிப்பாளர் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே பெண் மரணித்ததாக தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே சாவடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments