Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை பொலிஸாரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு


(ஏ.எல்.எம். ஷினாஸ்) 
கல்முனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த பாதிக்கப்பட்டுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு (11) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தர, சமூக பொலிஸ் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட், குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல் உட்பட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் நாளாந்தம் தொழிலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டிருந்த மக்களை பொலிஸார் தமது வாகனங்களில் ஏற்றி வந்து இந்த நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர். பொலிசாரின் இந்த மனிதபிமான செயற்பாட்டிற்கு சமூக ஆர்வலர்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.




















கல்முனை பொலிஸாரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith

Post a Comment

0 Comments