Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலகையே ஸ்தம்பிக்க வைத்த தொடர் குண்டுத் தாக்குதல்! ஆளும் மற்றும் எதிரணியினரின் அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட ஆளும் மற்றும் எதிரணியினரால் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அலரிமாளிகையில் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாதத் தாக்குதல்களையும், அதில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்திக்காகவும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது அலரிமாளிகை வளாகத்தில் விளக்குகளை ஏற்றி ஒளிரவிட்டு பிரதமர் மஹிந்த அஞ்சலி செலுத்தினார். பிரதமரின் பாரியாரான சிரந்தி ராஜபக்சவும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டார்.
இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினார்கள். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸவும், உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான கொழும்பு பிட்டகோட்டே பகுதியிலுள்ள ஸ்ரீகொத்தவுக்கு அருகில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இன்றைய தினம் காலை இடம்பெற்றது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான ரஞ்ஜித் மத்தும பண்டார, அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments